Hero Imgs

நம் எல்லோருக்கும் ஒரு ஹீரோ வேண்டும்.
ஆனால் நம்மில் யார் வேண்டுமானாலும் ஒரு ஹீரோ ஆகலாம் !

மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்களையும் உதவி தேவைப்படுபவர்களையும் ஒருங்கிணைப்பதே இந்த முயற்சியின் நோக்கம்

உங்களுடைய தேவைக்கேற்ப, உங்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நண்பர்களின் உதவியை நாங்கள் நாடி பெற முடியும்..

உங்களில் உதவி நாடுபவர்களையும் உதவுவோர்களையும் ஒன்று சேர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இது எப்படி வேலை செய்கிறது ?

இந்த இக்கட்டான முழுஅடைப்பு காலகட்டத்தில், உதவி வேண்டுபவர்களையும் சேவை மனப்பான்மை கொண்ட உதவும் கரங்களையும், ஒருங்கிணைப்பதே எங்கள் நோக்கமாகும்.

உங்களால் எவ்வாறு உதவ முடியும் மற்றும் உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்பதை எங்களிடத்தில் சொல்லுங்கள்

உங்கள் தேவையைப் பொறுத்து, உங்களுக்கு அருகாமையில் உள்ள யாராவது ஒருவர் மூலமாக உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வோம்.

தேவைகளுக்கேற்ப தகுதியான நபரை தெரிவு செய்தல்

உங்களுடைய தேவைக்கேற்ப, உங்களுக்கு அருகாமையில் உள்ள தகுதியான நபரை உங்களுடன் ஒருங்கிணைக்க முடியும்

உங்கள் சிக்கலிலிருந்து விடுபட நாங்கள் உதவ முடியும் அல்லது ஒரு புதிய ஹீரோவை உருவாக்க முடியும்

உங்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வரை தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வரும் வரும் ஒரு தன்னார்வ குழுவே நாங்கள்.


எங்கள் குழு

நாங்கள் ஒரு கம்பெனியோ அல்லது பவுண்டேசனோ அல்ல. எங்கள் குழுவில் உள்ள சேவை மனப்பான்மை கொண்ட நண்பர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியே இது.

Admin

Members

Cities

Content

Members

Cities

Design

Members

Cities

எங்களின் உடனடி தேவைகள் :


டெவலப்பர்ககள்
சமூக ஊடகங்களை (சோசியல் மீடியா) கையாள்வதற்கு தகுதியான நபர்கள்
கிராபிக்ஸ்களை உருவாக்கும் திறன் படைத்த டிசைனர்கள்
பல்வேறு நபர்களை ஒரே சமயத்தில் ஒருங்கிணைக்கும் திறன் பெற்ற நபர்கள் ( கோஆர்டினேட்டர்கள்)
நல்ல பேச்சு திறன் படைத்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட மக்களை திறன்பட கையாளும் திறன் பெற்ற நபர்கள்
இந்த முயற்சியை சீரிய முறையில் கையாண்டு சிறப்பாக செயல்பட தேவைப்படும் புதிய சிந்தனைகளை கொண்டவராக நீங்கள் இருந்தால். உங்கள் சேவை எங்களுக்கு உடனடியாக தேவை.

உங்கள் கவனத்திற்கு: இந்த முயற்சி ஒரு மக்கள் சேவையாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பங்கு பெற எந்த விதமான கட்டணமும் மாட்டாது. இதன் உறுப்பினர்கள் மக்கள் சேவையே மகேசன் சேவையாக கருதி, தங்கள் பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து, தற்போது நடைமுறையில் உள்ள முழு கதவடைப்பு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை செய்துவரும் ஒரு தன்னார்வ குழு ஆகும். உங்களுடைய சேவை இப்பூவுலகை காப்பாற்றும் ஒரு முயற்சியே என்பதை கருத்தில் கொள்ளவும்.

FAQs

உங்களின் சந்தேகங்களும் எங்கள் விளக்கங்களும்

நீங்கள் யார்? எதற்காக இப்பணியில் ஈடுபாடு?

தற்போது நமது நாடு மட்டுமல்ல இந்த உலகையே உலுக்கி கொண்டிருக்கும் COVID-19 தாக்குதலின்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் பொதுமக்களுக்கு தேவையான உடனடி உதவிகளை சேவை மனப்பான்மை கொண்ட நண்பர்களின் உதவியுடன் நிறைவேற்றி கொடுப்பதே எங்கள் நோக்கம். ஏனெனில் உலகத்தில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நம் நாட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கமோ அல்லது காவல்துறையோ செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல.

இதன் முதற்படியாக, மக்களின் உடனடி அத்தியாவசிய தேவைகளை அறிந்து கொள்வதும், அந்த தேவைகளை பூர்த்திசெய்ய தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதும் ஆகும்.

திரட்டப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு முழு தகவல் களஞ்சியத்தை உருவாக்கி நம் நாட்டு மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதே நம்முடைய நோக்கமாகும்.

நான் உங்களை எப்படி நம்புவது?

நாங்கள் உங்களைப் போலவே மனிதநேயம் கொண்ட சாதாரண மனிதர்கள்தான். எங்களைப் பற்றிய விரிவான தகவல்களுக்கு எங்களுடைய லிங்க்ட்.இன் பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த முயற்சியை எங்களுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் முன்னெடுத்து வருகிறோம். எந்தவிதமான வருமானத்தையும் யாரிடத்தில் இருந்தும் நாங்கள் பெறுவதில்லை. மேலும் எங்கள் நடவடிக்கைகளில் எந்தவிதமான ஒளிவு மறைவுகள் கிடையாது. இது எங்களால் மற்றவர்களுக்கு செய்யக்கூடிய ஒரு சிறு உதவியே ஆகும்.

மேலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், இந்த வெப்சைட்டின் அட்மின் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அஜின்கியாவின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் எவ்வாறு உதவ முடியும்?

நமது நாடு முழுவதும் உங்களைப்போன்ற நல்ல உள்ளம் கொண்ட பல்வேறு நண்பர்கள் நம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள். உங்களுக்கு தேவைப்படும் உதவியை எங்களுக்கு நீங்கள் தெரியப்படுத்தும் போது, உங்களுக்கு அருகாமையில் உள்ள நமது குழுவின் நண்பர்களுக்கு உங்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வோம்.

நான் கேட்கும் உதவியை செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும்?

நேரம் குறித்த எந்தவிதமான உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது என்றாலும், முடிந்தவரை ஒரு மணி நேரத்திற்குள்ளாக உங்களுக்கு உதவ முயற்சி செய்வோம்.

நான் எவ்வாறு மற்றவர்களுக்கு உதவ முடியும்?

தற்போதைய இக்கட்டான நிலைமையில், திட்டமிடல், ஒருங்கிணைப்பு (கோ ஆர்டினேஷன்), நிர்வாக மேலாண்மை, மக்கள் தொடர்பு, சமூகவியல், கோடிங், போட்டோஷாப், உற்பத்தி மேலாண்மை போன்ற எந்த ஒரு துறையில் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்களோ, அந்தத் திறமையை அவர்களின் நலனுக்காக நீங்கள் பயன்படுத்த இது ஒரு அருமையான வாய்ப்பு.

அதுமட்டுமில்லாமல் மக்கள் மேலாண்மை பண்பு - அதாவது உங்கள் பேச்சு திறமை, கருணை எண்ணம், பொறுமை போன்ற பண்புகளை மக்களின் குறைகளை தீர்க்கும் உன்னத பணியில் செலவிட முடியும்.

உங்களிடம், இணைய வசதியுடன் கூடிய லேப்டாப் அல்லது மொபைல் போன் மற்றும் சில மணித்துளிகளை மற்றவர்களின் நலனுக்காக பயன்படுத்தும் எண்ணம் மற்றும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்திற்கான கனவுகள் இருந்தால், இதுவே சரியான தருணம். எங்களை உடனடியாக தொடர்புகொள்ளவும்.

நான் மற்றவர்களுக்கு வழங்க தயார். என்னை எவ்வளவு நேரத்தில் நீங்கள் தொடர்பு கொள்வீர்கள்?

இதற்கான எந்த உத்தரவாதத்தையும் தர முடியாது என்றாலும், உதவி கோரப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம்.

உங்களுடைய உதவியை பெறுவதற்கு ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா?

கண்டிப்பாக இல்லை. நாங்கள் மற்றவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்வதற்காக, சொந்த விருப்பத்தின் பேரில் குடியிருக்கும் ஒரு குழுவே ஆகும். எங்கள் சேவைகளுக்கு எந்தவிதமான கட்டணத்தையும் உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களுக்கான விலையை மட்டும் நீங்கள் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு: எங்கள் குழுவைச் சேர்ந்த நபர் என்று கூறிக்கொண்டு உங்களை தொடர்பு கொள்ளும் எந்த நபருக்கும் எக்காரணத்தைக் கொண்டும், எதற்காகவும், பே-டி.எம், கூகுள் பே போன்ற ஆப்களின் மூலமாக பணத்தை டிரான்ஸ்பர் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால், உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு நீங்களே பொறுப்பு என்பதை கவனத்தில் கொள்ளவும்.

நீங்கள் எங்கிருந்து இயங்குகிறீர்கள் ?

தற்போதைக்கு நாங்கள் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு நகரத்தில் இயங்கி வந்தாலும், நமது சக மனிதர்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகளை நாட்டில் எந்த பகுதியிலும் பெறுவதற்கான முயற்சியை எங்களால் மேற்கொள்ள முடியும்.

எனக்குத் தேவைப்படும் உதவியை பெற நான் வெளியே போக வேண்டியிருக்குமா?

நீங்கள் வெளியே போக வேண்டாம். எந்த ஒரு நபருக்கு உதவி தேவைப்படுகிறதோ, அவர்களுக்கும் உங்களுக்கும் தக்க தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது எங்களுடைய சேவையின் முக்கிய நோக்கமாகும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் லாக் டவுன் சமயத்தில், மருத்துவமனைகள், பல்வேறு சேவை பவுண்டேஷன் கள், அரசு அலுவலகங்கள் போன்றவை மிகவும் குறைந்த அளவு பணியாளர்களுடன் இயங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்தச் சமயத்தில் எங்கள் குழுவில் இணைந்துள்ள நண்பர்களின் திறமையை மற்றவர்களின் நலனுக்காக உபயோகப்படுத்தி வருகிறோம்.

என்னுடைய விலாசம் மற்றும் தொலைத்தொடர்பு எண்கள் யாரிடத்தில் இருக்கும்?

சுயவிருப்பத்தின் பேரில் எங்களுடன் இணைந்து பணியாற்றும் உறுப்பினர்களிடம் மட்டுமே உங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கும். இந்த தகவல்கள் உங்களுக்கு தேவைப்படும் அல்லது உங்களால் மற்றவர்களுக்காக வழங்கப்படும் உதவிகளை பயன்படுத்த மட்டுமே உபயோகிக்கப்படும். வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த மாட்டோம்.

உங்களை தொடர்பு கொள்ள எந்த மொழியை நான் பயன்படுத்த வேண்டும்?

தற்போதைக்கு நீங்கள் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி மற்றும் பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

ஏ.டி.எம் அல்லது என்னுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து தர நீங்கள் உதவி செய்வீர்களா?

மன்னிக்கவும். இதுபோன்ற பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட சேவைகளில் நாங்கள் ஈடுபடுவதில்லை. உங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அத்தியாவசிய சேவைகளை மட்டுமே வழங்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறோம். ஒருவேளை உங்களுக்கு அவசர மருத்துவ உதவி போன்ற மிகவும் முக்கியமான தருணத்தில் மட்டும் உங்களை வங்கிக்கோ அல்லது ஏ. டி. எம். கோ கூட்டிப் போகும் உதவியை வழங்க ஏற்பாடு செய்வோம்.

நான் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியன். இந்தியாவில் வசிக்கும் என்னுடைய உறவினர்களுக்கு தேவைப்படும் உதவிகளை எவ்வாறு பெற முடியும் ?

கவலை வேண்டாம் நண்பரே! இந்தியாவில் எந்த பகுதியில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நாங்கள் தயார். அவசர உதவிகளுக்கு, நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.